செய்திகள்

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக ருவான் குணசேகர நியமனம்

பொலிஸ் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றி வந்த சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் அஜித் ரோஹண கொழும்பு வடக்குப் பிராந்தியத்திற்கு பொறுப்பதிகாரியாக நியமிக்கப்பட்டுள்ளார்.

வெளிநாட்டு விஜயமொன்றை மேற்கொண்டிருந்த முன்னாள் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹணவிற்கு பதில், தற்காலிகமாக சட்டத்தரணியான சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் ருவான் குணசேகர பதில் பொலிஸ் ஊடகப் பேச்சாளராக நியமிக்கப்பட்டிருந்தார். தற்போது அந்த நிமயனம் நிரந்தரமாக்கப்பட்டுள்ளது.

அஜித் ரோஹண நீண்ட காலமாக பொலிஸ் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.