செய்திகள்

பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் 12 பேர் இடமாற்றம்

12 பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிகள் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் இடமாற்றம் செய்யபப்பட்டுள்ளனர்.
பொலிஸ் நிலைய மாற்றம் தொடர்பான குழுவின் அனுமதியுடன்  பொலிஸ் மா அதிபரினால் இந்த இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக பொலிஸ்  திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி குளியாபிட்டிய , கொட்டாஞ்சேனை , மோதரை , மாங்குளம் , கொம்பனித் தெரு ,தலைமன்னார் , நாரம்மல ,பன்வில மற்றும் குருநாகல்  உள்ளிட்ட பொலிஸ் நிலையங்களின்  பொறுப்பதிகாரிகளே இவ்வாறு இடமாற்றப்படவுள்ளனர்.