செய்திகள்

பொலிஸ் பிரதிநிதிகளை சந்திக்கிறார் ஜனாதிபதி

நாட்டின் சிவில் பாதுகாப்பு குறித்தும் பொலிசாரின் கடமைகள் தொடர்பாகவும் கலந்துரையாட இலங்கையின் பொலிஸ் பிரதிநிதிகளை ஜனாதிபதி மைத்திரிபால அவசரமாக சந்திக்கவுள்ளார்.

கொழும்பில் நாளை மாலை இச்சந்திப்பு ஏற்பாடாகியுள்ளது. பொலிஸ்மா அதிபர் என்.கே.இலங்ககோன் மற்றும் பிரதி பொலிஸ் மா அதிபர்கள் பலரும் இக்கலந்துரையாடலில் பங்குபற்றவுள்ளனர்.