செய்திகள்

பொலிஸ் – பொதுமக்கள் முறுகல்: மூளாயில் பதற்ற நிலை

மூளாய், மாவடி பகுதியில் பொலிஸாருக்கும் பொதுமக்களுக்கும் இடையே ஏற்பட்ட முறுகலால், பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியதில் அங்கு பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தச் சம்பவம் குறித் மேலும் தெரியவருவதாவது: குற்றச் செயல்களுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவரை கைது செய்ய பொலிஸார் குறித்த பகுதிக்கு இன்று மாலை சென்றுள்ளனர். சந்தேக நபரின் வீட்டுக்கு சென்று அவரைக் கைதுசெய்யமுற்பட்டவேளை அவர் பொலிஸார் ஒருவரை கத்தியால் குத்திவிட்டுத் தப்பிச் சென்றுள்ளார்.

இந்த நிலையில் குறித்த இடத்துக்கு மேலதிக பொலிஸார் வரவழைக்கப்பட்டு சுற்றிவழைத்து தேடுதல் நடத்தப்பட்டுள்ளது. இதன்போது பொதுமக்களுக்கும் பொலிஸாருக்கும் இடையே முறுகல் ஏற்பட்டுள்ளது.

இதனையடுத்து பொலிஸார் வானத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்தனர் என்று தெரியவருகிறது. கத்திக்குத்துக்கு இலக்காகி காயமடைந்த பொலிஸ் அதிகாரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.