செய்திகள்

பொலிஸ் மா அதிபரிடமிருந்து அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் விசேட அறிவித்தல்

கிராமிய பிரதேசங்களில் தமிழ் சிங்கள புத்தாண்டையொட்டி சிறியளவிலான நிகழ்வுகள் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளதால் அவற்றை தடுப்பதற்கு நடவடிக்கையெடுக்குமாறு பதில் பொலிஸ் மா அதிபர் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் அறிவித்துள்ளார்.
இதனால் கிராமிய பகுதிகளில் கண்கானிப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுமாறு அவர் அறிவித்துள்ளார்.
தற்போது நாட்டில் கொரோனா அச்சுறுத்தல் நிலவும் நிலையில் மக்கள் ஒன்று கூடும் வகையிலான நிகழ்வுகளுக்கு தடை செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. -(3)