செய்திகள்

பொலிஸ் விசாரணையில் துமிந்த சில்வா! 6 மணி நேரம் வாக்குமூலம்!!

ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவுக்கு நெருக்கமானவர் எனக் கருதப்படும் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா கொழும்பிலுள்ள பொலிஸ் குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டு ஆறு மணி நேரம் விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டுள்ளார்.

துமிந்தவுடன் அவரது சட்டத்தரணிகள் இருவரும் சென்றிருந்தனர். போதை வஸ்து கடத்தலுடன் தொடர்புடையவர் என்ற சந்தேகத்தின் பேரில் பாகிஸ்தானில் வைத்து கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட வெல்லே சுதா கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையிலேயே துமிந்த விசாரணைக்கு உள்ளாக்கப்பட்டதாக பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.