செய்திகள்

பொஸ்னிய யுத்த குற்றவாளிகளை நாடு கடத்த அமெரிக்கா திட்டம்?

யுத்த குற்றங்களில் ஈடுபட்ட பின்னர் அமெரிக்காவில் தஞ்சமடைந்துள்ள 150 பொஸ்னிய குடியேற்றவாசிகளை நாடுகடத்துவதற்கு வாசிங்டன் தீர்மானித்துள்ளதாக நியுயோர்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

அமெரிக்காவில் இவ்வாறு 300 பொஸ்னியர்கள் தங்கள் யுத்தகுற்றங்களை மறைத்து வாழ்வதாகவும்,இவர்களில் பலர் ஸ்ரெபிரெனிகாவில் 8000 முஸ்லீம்கள் படுகொலைசெய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனவும் அந்த பத்திரிகை தெரிவித்துள்ளது.

1990களில் 120.000 பொஸ்னியர்கள் அமெரி;க்காவில் தஞ்சம் புகுந்தனர் எனினும் அவர்களது பிண்ணனி குறித்து விசாரிப்பதற்கு நடவடிக்கை எதுவும் எடுக்கப்படாதது குறிப்பிடத்தக்கது.

எனினும் அமெரிக்காவின் குடிவரவு திணைக்களம் 2008 இல் யுத்த குற்றப்பிரிவொன்றை ஏற்படுத்தியிருந்தது. எத்தியோப்பியா மற்றும் ருவான்டா போன்ற நாடுகளிலிருந்து அமெரிக்கா சென்றுள்ளவர்களை அது விசாரணைசெய்தது.

எனினும் இந்த விசாரணைகளின் போது பொஸ்னியாவிலிருந்து வந்தவர்கள் குறித்தே அதிகம் விசாரணை இடம்பெற்றுள்ளது. இதேவேளை 600 ற்கும் மேற்பட்ட யுத்த குற்றவாளிகள் அமெரிக்காவில் மறைந்திருக்கலாம் என விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.