செய்திகள்

பொஹோ ஹராம் தாக்குதலில் 30 பேர் பலி

நைஜீரீயாவின் வடகிழக்கு சிபொக் நகரிற்கு அருகில் உள்ள இரு கிராமங்கள் மீது பொஹோ ஹராம் அமைப்பினர் மேற்கொண்ட தாக்குதலில் 30ற்கும் மேற்பட்ட பொதுமக்கள கொல்லப்பட்டுள்ளனர்.
வியாழக்கிழமை இடம்பெற்ற இ;ந்த தாக்குதலின் போது இரு கிராமங்கள் முற்றாக தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

தங் களுக்கு கிடைக்கின்ற தகவல்களின் படி பொஹோ ஹராம் தீவிரவாதிகள் 30 பேரை கொன்றிருக்கலாம் என சிபொக்கின் முதியவர்கள் அமைப்பு தெரிவித்துள்ளது.
இரு கிராமங்களும் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அசிகிரா உபா என்ற நகரத்தின் மீது தாக்குதலை மேற்கொண்டு விட்டு வெளியேறிக்கொண்டிருந்த தீவிரவாதிகளே தாங்கள் செல்லும் வழியில் உள்ள இந்த கிராமங்களை தாக்கியுள்ளனர். குறிப்பிட்ட அசிகிரா உபா நகர் மீது தாக்குதல மேற்கொண்ட தீவிரவாதிகள் இந்த நகiiயும் முற்றாக தீக்கிரையாக்கியதாக வும் தெரியவருகின்றது.

குறிப்பிட் சிபொக் பகுதியிலியே கடந்த வருடம் பொஹோ ஹராம் தீவிரவாதிகள் 276 பாடசாலை மாணவிகளை கடத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.