செய்திகள்

போகோ ஹராம் தாக்குதலில் பேரழிவை காண்பிக்கும் செய்மதி படங்கள்

போகோ ஹராம் அமைப்பினால் கடந்த வாரம் தாக்குதலுக்குள்ளான நைஜீரிய நகரத்தில் பாரிய அழிவுகள் ஏற்பட்டுள்ளமை செய்மதி படங்கள் மூலமாக தெரியவந்துள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
பகா மற்றும் டொரன் பகாவில் 3700 கட்டிடங்கள் அழிக்கப்பட்டுள்ளதும், சேதமாக்கப்பட்டுள்ளதும் இந்த செய்மதி படங்கள் ஊடாக தெரியவந்துள்ளதாக மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
போஹோ ஹராம் தீவிரவாதிகள் கண்மூடித்தனமான தாக்குதல்களை மேற்கொண்டதாக பேரழிவு ஏற்பட்டுள்ளதாகவும் நேரில் கண்டவர்களை அடிப்படையாக வைத்து மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.
அந்த அமைப்பினர் மேற்கொண்ட தாக்குதல்களில் இதுவே மிகப்பயங்கரமானது,தாக்குதலுக்குள்ளான நகரங்களில் ஒன்று உலகவரைபடத்திலிருந்தே முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது ,வீடுகள், மருத்துவநிலையங்கள்,பாடசாலைகள் என அனைத்தும் தீக்கிரையாக்கப்பட்டுவிட்டன என மன்னிப்புச்சபை தெரிவித்துள்ளது.