செய்திகள்

போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை நைஜீரியாவின் தலைமையில் நடத்த வேண்டும்: அதிபர் முஹமது புஹாரி

போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை நைஜீரியாவின் தலைமையில் நடத்த வேண்டும் என அந்நாட்டு அதிபர் முஹமது புஹாரி கருத்து தெரிவித்துள்ளார்.

தீவிரவாதக் குழுவான போகோ ஹராமை எதிர்த்துப் போராட கூட்டாக ஒரு உத்தியை உருவாக்க வழி செய்யும் ஒரு கூட்டம் நைஜீரியத் தலைநகர் அபுஜாவில் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் ஐந்து மேற்கு ஆப்ரிக்க நாடுகளின் தலைவர்கள் பங்கேற்றார்கள்.
இக்கூட்டத்தில் பேசிய நைஜீரிய அதிபர் முஹமது புஹாரி ”போகோ ஹராம் தீவிரவாதிகளுக்கு எதிரான போரை நைஜீரியாவின் தலைமையில் நடத்துவது தான் சரியாக இருக்கும். ஆறு மாதங்களுக்கு ஒரு முறை தலைமையை மாற்றுவது நடவடிக்கையில் இடையூறை ஏற்படுத்தும்” என தெரிவித்தார்.