செய்திகள்

போசனைப் பொதிக்கு பதிலாக வவுச்சர்

கர்ப்பிணிப் பெண்களுக்காக மாதாந்தம் வழங்கப்படும் போசனைப் பொதிக்குப் பதிலாக வவுச்சர் ஒன்றைப் பெற்றுக்கொடுக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. இது தொடர்பான அமைச்சரவைப் பத்திரமொன்றை, எதிர்வரும் நாட்களில் அமைச்சரவையில் சமர்ப்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

மேற்படி போசனைப் பொதியைப் பெற்றுக்கொள்ளும் போது, தாங்கள் பல்வேறு சிரமங்களை எதிர்கொள்வதாக கர்ப்பிணிப் பெண்களிடமிருந்து பல்வேறு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன. இந்த முறைப்பாடுகளைக் கருத்திற்கொண்டே, அவர்களுக்கு வவுச்சர்களைப் பெற்றுக்கொடுத்தல் எனும் தீர்மானத்துக்கு அரசாங்கம் வந்துள்ளதாக மேற்படி பேச்சாளர் கூறினார்.

தெரிவு செய்யப்பட்ட விற்பனை நிலையங்களில், மேற்படி வவுச்சரைக் கையளித்து, அதற்குரிய பொருட்களைக் கொள்வனவு செய்துகொள்ள முடியும். விற்பனை நிலையங்களைத் தெரிவு செய்யும் பொறுப்பு, சுகாதார சேவை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

n10