செய்திகள்

போட்டியிட்டால் வெற்றிலை சின்னத்திலேயே போட்டியிடுவேன் தேசிய பட்டியலை நம்ப மாட்டேன் : மஹிந்த ராஜபக்‌ஷ

தேர்தலில் போட்டியிட்டால் பொதுவான வெற்றிலை சின்னத்திலேயே போட்டியிடுவாம். தேசிய பட்டியலில் தருவதாக கூறினால் அதனை நம்பப்போவதில்லையென முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷ தெரிவித்துள்ளார்.
காலமான கொளனை கோரளை விகாரையின் விகாராதிபதியின் தேகத்துக்கு அஞ்சலி செலுத்துவதற்காக அங்கு சென்றிருந்த போது அங்கிருந்தவர்களுடன் கலந்துரையாடிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
நாம் போட்டியிடுவதென்றால் வெற்றிலை சின்னத்திலேயே போட்டியிடுவோம். அவரின் கீழ் போட்டியிடுவற்கு இடமில்லையென அவர் கூறியுள்ளாரே. எப்படியும் தேசிய பட்டியலில் இடம் தருவதாக கூறினாலும் வெற்றி பெற்ற பின்னர் பெயரை வெட்டி விடுவார்கள். இதனால் பொது வெற்றிலை சின்னத்தில் நாம் போட்டியிடுவோம்.