செய்திகள்

போதைபொருளை தடுக்க ஜனாதிபதியிடம் தேசிய திட்டம்

நடைமுறைப்படுத்தப்படும். நீண்ட காலமாக மக்களை ஆட்கொண்டுவரும் கொடிய போதைப்பொருள் இனி இல்லாமல் செய்ய விரைவில் இத்தேசிய செயல் திட்டம் நடைமுறைப்படுத்தப்படும் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.

போதைபொருள் ஒழிப்பு தொடர்பான விசேட கலந்துரையாடல் ஒன்று ஜனாதிபதி செயலகத்தில் இன்று நடைபெற்றது. இதன்போதே ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்தார்.

இக்கலந்துரையாடலில் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் செயலாளர் மாதுலுவாவே சோபித தேரர் , ஜாதிக ஹெல உறுமயவின் தலைவர் ஒமைப்பே சோபித தேரர், ஹெலஉறுமயவின் பாராளுமன்ற உறுப்பினர் அதுரலியே இரத்தினத்தேரர் ஆகியோர் கலைந்து கொண்டு கருத்துக்களை முன்வைத்தனர்.

மேலும் இலங்கையில் நீண்டகால போதைபொருள் தடுப்பு நடவடிக்கையும், விழிப்புணர்வும் அவசியம் என்றும் ஜனாதிபதி கேட்டுக்கொண்டார்.