செய்திகள்

போதைப்பொருள் வர்த்தகத்தில் அரச நிறுவன அதிகாரிகள் : ஜனாதிபதி தெரிவிப்பு

இரண்டு அரச நிறுவங்களை சேர்ந்த அதிகாரிகள் சிலர் போதைப் பொருள் வியாபாரத்துடன் தொடர்புபட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி செயலகத்தில் இலங்கை வர்த்தக சபை அதிகாரிகளை நேற்று ஜனாதிபதி செயலகத்தில் சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

போதைப் பொருள் வியாபாரத்தை நாட்டில் ஒழிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கையெடுத்துள்ளது. இதற்கு சகல தரப்பினரும் ஒத்துழைக்க வேண்டும். அவ்வாறாக வியாபாரத்தில் ஈடுபடுபவர்களுக்கு எதிராக கடும் நடவடிக்கையெடுக்க வேண்டும். கடந்த வாரம் போதை போருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள் தொடர்பான தகவல் கிடைத்தது. அதில் இரண்டு அரச நிறுவனங்களை சேர்ந்த சிலர் தொடர்புடையதாக தெரிய வந்துள்ளது என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.