செய்திகள்

போதைப் பொருட்கள் உடலில் ஏற்படுத்தும் நாட்டம்

மருத்துவர் சி. யமுனாநந்தா

போதைப் பொருட்கள் மனமாற்றிகளாக அமைகின்றன. இதன் பாவனை ஒருவரின் உணர்வுகளில், உடற்றொழிலியல் செயற்பாடுகளில், உளநிலையில், ஆன்மீக நிலையில் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன. போதைப் பாவனை மனிதனின் விழிநிலையிலும் மாற்றங்களை ஏற்படுத்துகின்றன.

சாதாரணமான ஒருவர் ஒரு தடவை போதைப் பொருளினை உபயோகித்தாலேயே அவரது மூளையின் கட்டமைப்பு (நேரசழிடயளவiஉவைல) நிரந்தரமாகப் பாதிக்கப்படும். இதனால் ஒருவரின் மன உணர்வு நிலைகள் மாறுபடும். ஞாபகசக்தி பாதிக்கப்படும். மேலும் போதைப் பொருளுக்கு அடிமையாதலும், அது அடுத்த சந்ததிக்கு கடத்தப்படலும் போதைப்பொருள் பாவிக்கும் போது பரம்பரையலகுகளிலும் மாற்றத்தினை ஏற்படுத்தும்.

மனிதமூளையின் நரம்புக்கலங்களின் கணத்தாக்கப் பாதையில் சில கதவுகளை (5ர்வு1யுஇ 5ர்வு 2டீ) போதைப்பொருட்கள் கட்டுப்படுத்துகின்றது. வரலாற்றுக் காலம் முதல் தற்போது வரை பல்வேறு வகையான போதைப்பொருட்கள் பாவனையில் இருந்துள்ளன. ஆரம்பத்தில் இயற்கை மூலிகைகளிலும், காளான்களிலும் இருந்து மனிதன் போதையினை பெற்றான். இன்று செயற்கையான இரசாயனங்கள் மூலமும் மருந்துகள் மூலமும் போதையினை அதிகம் பெறுகின்றான்.

போதைப்பொருட் பாவனை ஏற்படுத்தும் அசாதாரணமாற்றங்கள்
1. புலனுணர்வு மாற்றங்கள்
2. எண்ண மாற்றங்கள்
3. பேச்சு மாற்றங்கள்
4. ஞாபக மாற்றங்கள்
5. உணர்வுகளில் மாற்றங்கள்
6. தன்னை உணர்வதில் ஏற்படும் மாற்றங்கள்
7. விழிப்புணர்வில் ஏற்படும் மாற்றங்கள
8. உடலியக்கத்தில் ஏற்படும் மாற்றங்கள்
9. அசாதாரண சுபாவங்கள்
10. பாலியல் கோளாறுகள்

புலனுணர்வில் ஏற்படும் மாற்றங்கள்
புலன்கள் திரிவுபடல், செறிவு மாறுபடலாக அமைலாம், அளவு மாறுபடலாக அமைலாம், வடிவம் மாறுபடலாக அமைலாம்.

தவறானபுலனுணர்வுத் தன்மையால் மயாத் தோற்றங்கள் அமைலாம், மாயப் புலனுணர்வாக அமையலாம், கேட்டல் தன்மை, முன்னிலை, படர்க்கையில் நிகழும் பார்வைப்புலன் உருவங்கள் நெரிதல் நிலைகள் ஏற்படும்.

காலத்தை உணர்தல் சந்தோசமான நிலையாக காலம் குறுகிக் காணப்படும். இந்நிலையில் பாலியல் வல்லுறவுகள் மேற்கொள்ளலாம். துக்கமான நிலையில் காலம் நீண்டு காணப்படும் இந்நிலையில் தற்கொலை முயற்சிகள் மேற்கொள்வர்.

போதைப்பொருள் பாவனை எண்ணங்களில் ஏற்படுத்தும் மாற்றங்கள்
சாதாரணமானவர்களின் எண்ணங்கள் அவர்களின் புத்திக்கூர்மை, கலாச்சாரம், அனுபவம், அவர்களின் வாழும் காலம் என்பனவற்றில் தங்கி உள்ளது. எண்ணங்கள் தர்க்கரீதியானதாகவும் இருக்கலாம். கற்பனையாகவும் இருக்கலாம். போதைப்பாவனையில் எண்ணங்களில் விகாரம் ஏற்படும். அவையாவன : எண்ணங்கள் உருவாவதில் மாற்றங்கள் ஏற்படும். எண்ணங்கள் விரைவாகத் தோன்றலாம். எண்ணங்கள் மந்தமாகத் தோன்றலாம்.எண்ணங்கள் மீளமீளத் தோன்றலாம். போதைப்பாவனையில் எண்ணங்களின் தொடர்ச்சியில் மாற்றங்கள் ஏற்படலாம். எண்ணங்கள் நிலைத்து நிற்கலாம் அல்லது தடைப்படலாம் அல்லது ஒரு எண்ணத்துடன் மற்றைய எண்ணம் கலக்கலாம் அல்லது இணையலாம். அன்றேல் எண்ணங்கள் தடம் மாறலாம். ஒருகணத்தில் பல எண்ணங்கள் உருவாகலாம்.

போதையில் எண்ணத்தின் நிலையில் மாற்றங்கள் ஏற்படலாம். ஒரே எண்ணம் திரும்பத் திரும்ப வரலாம். வேற்று எண்ணங்களில் தொடர்புகள் ஏற்படலாம். எண்ணங்கள் உட்புகலாம். எண்ணங்கள் அகற்றப்படலாம். போதையில் எண்ணத்தின் உள்ளடக்கத்திலும் மாற்றங்கள் ஏற்படலாம். சந்தேக எண்ணம், குற்றஎண்ணம், வெறுமைஎண்ணம், பாலியல் எண்ணங்கள், பொறாமை எண்ணம் என்பன ஏற்படலாம்.

போதையில் எண்ணங்கள் உருவாவதில் தொடர்ச்சியின்மை, கட்டமைப்பின்மை, உள்ளடக்கம் மாறல் என்பவை காணப்படும். போதையில் பேச்சுத்தடங்கல் ஏற்படும். சொற்களின் கலவைகாணப்படும். போதையில் உடனடிஞாபகம், குறுகியஞாபகம் என்பன பாதிக்கப்படும்.

போதையில் உணர்வெழுச்சிகள் அசாதாரணமாக வெளிக்காட்டப்படலாம். போதையில் தன்னை உணர்தலில் தனது கட்டமைப்பை உணர்தலில், தனது தொடர்ச்சியை உணர்தலில், தனது எல்லையை உணர்தலில் தவறுகள் ஏற்படலாம்.

போதை விழிப்புணர்வில் மாற்றத்தை ஏற்படுத்தும். நித்திரை, ஆழ்தூக்கம் ஏற்படலாம். சோம்பல், மப்பு, மயக்கம் என்பன ஏற்படலாம். விழிப்புணர்வு அற்றநிலையாக இறப்பும் ஏற்படலாம். போதைப்பொருள் பாவனை உடலியக்கத்திலும் அசாதாரணமான மாற்றத்தை ஏற்படுத்தும். போதைப் பாவனை சந்தேகப்படும் சுபாவம், துன்புறுத்தும் சுபாவம் என்பவற்றை அதிகரிக்கும்.

பாலியல் கோளாறுகள் போதைப் பாவனையில் அதிகரிக்கலாம். சாதாரணவிலகல் நடத்தைகள், கலாச்சாரவிலகல் நடத்தைகள், தனிமனிதவிலகல் நடத்தைகள் என்பன அதிகரிக்கும்.

போதைப்பொருள் பாவனைக்கு உள்ளாவோரில் அநேகர் மனநோயினால் பாதிக்கப்பட்டவர்களாகவே காணப்படுகின்றனர். இவர்களில் பதகளிப்பு நோய், மனச்சோர்வுநோய், உளப்பிளவை நோய், மதுபானம், புகைப்பிடித்தல் போன்ற பழக்கவழக்கங்கள் காணப்படுகின்றன. போதைப்பொருட்களின் மருத்துவத்-தன்மையும் அதன் குறுகிய வீச்சிலான பிரயோகமும் எதிர்காலத்தில் போதை தொடர்பான சமூகத் தாக்கத்தைத் தணிக்க உதவும். இது தொடர்பான பிரயோக மருத்துவம் விரிவடைதல் போதைப் பாவனைக் கட்டுப்பாட்டில் அவசியம்.