செய்திகள்

போதைப் பொருளுடன் வெலே சுதவின் சகோதரர் கைது

போதைப் பொருள் வியாபாரம் தொடர்பாக கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ள  சமன்த குமார எனப்படும் வேலே சுதாவின் சகோதரர் ஒருவர்  கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இன்று பகல் கொகுவல பகுதியில் வைத்து ஹெரோயினுடன்  இவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கிடைக்கப் பெற்ற தகவல் ஒன்றின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவம் இதன்போது, 2 கிராம் 300 மில்லிகிராம் ஹெரோயினும் அவரிடமிருந்து மீட்கப்பட்டுள்ளதாகவும்  பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேகநபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது இவர் வேலே சுதாவின் இளைய சகோதரர் எனத் தெரியவந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.