செய்திகள்

போதை தலைக்கேறியவர் யானையுடன் சேஷ்டை விட்டு தாக்கப்படும் காணொளி

உடவளவையில் உள்ள தேசிய பூங்காவில் யானை ஒன்றுடன் சேஷ்டை புரிந்த மது அருந்திய நபர் ஒருவர் அந்த யானையினால் தாக்கப்பட்டுள்ளார்.

மது அருந்திவிட்டு போதை தலைக்கேறிய நிலையில் அந்தபூங்காவில் நின்ற யானைக்கு அருகில் பலரும் மறிக்க மறிக்க இந்த நபர் யானையை ஆத்திரமூட்டும் வகையில் அதன் முன்னாள் படுத்துக்கிடந்தபோதே அவர் தாக்கப்பட்டார்.

இந்த யானை சில தினங்களுக்கு முன்னர் தான் ஒருவரை கொன்றது என்று சிலர் அவரை எச்சரித்தபோதிலும் அதனை உதாசீனம் செய்து விட்டு யானைக்கு கிட்டே சென்று அவர் தாக்கப்படும் காட்சியை அங்கு கூடி நின்றவர்கள் வெளியிட்டுள்ளனர்.

[youtube url=”https://www.youtube.com/watch?v=sSthtqhgYDw” width=”500″ height=”300″]