செய்திகள்
போராட்டக்காரர்களுக்கு நட்சத்திர ஹோட்டலில் இருந்து உணவு: விசாரணை ஆரம்பம்!
கொழும்பு காலிமுகத்திடலில் மூன்று மாதங்களுக்கும் மேலாக போராட்டத்தில் ஈடுபடும் குழுவினருக்கு பிரபல நட்சத்திர ஹோட்டல் ஒன்றில் இருந்து உணவு விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவது தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நாளொன்றுக்கு 600 வரையிலான உணவுப் பொதிகள் அந்த ஹோட்டல் ஊடாக விநியோகிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இவை இலவசமாக வழங்கப்பட்டனவா அல்லது ஏதேனும் அமைப்பினால் கொள்வனவு செய்யப்பட்டதா என விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.
-(3)




