செய்திகள்

போர்க் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் உள்ளக விசாரணை அவசியம்: வலியுறுத்துகிறார் சுமந்திரன்

யுத்தக் குற்­றச்­சாட்­டுக்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர் பில் உள்­ளக விசா­ரணை நடத்­தப்­ப­டு­வது அத்­தி­யா­வ­சி­ய­மா­ன­தாகும். இதனை விளங்­கிக்­கொள்­ளாமல் பலரும் இந்த உள்­ளக விசா­ர­ணை யில் நம்­பிக்கையில்­லை­யென்று தெரி­வித்­து­வ­ரு­கின்­றனர். ஐ.நா.மனித

உரிமைப் பேர­வையில் நிறை­வேற்­றப்­பட்ட பிரே­ர­ணையின் 10ஆவது பந்­தியில் சர்­வ­தேச விசா­ர­ணையும் உள்­ளக விசா­ர­ணையும் நடத்­தப்­ப­ட­வேண்டும் என்றே கூறப்­பட்­டி­ருக்­கி­றது என்று தமிழ்த்­தே­சியக் கூட்­ட­மைப்பின் பாரா­ளு­மன்ற  உறுப்­பினர் சுமந்­திரன் தெரி­வித்தார்.

தமிழ் மக்­க­ளுக்கு நடந்த அநீ­திகள் அதன் உண்­மைகள் முழு­மை­யாக வெளி­வர வேண்டும் என்­பதே எம் அனை­வ­ரதும் ஒரே எதிர்­பார்ப்­பாகும்.எனவே உள்­ளக விசா­ர­ணை­யா­னது இது­வ­ரையில் தெரிந்த உண்­மை­க­ளுக்கு அப்பால் வேறு வெளி­வ­ராத பல உண்­மை­களை கண்­ட­றிய வாய்ப்­பாக அமை­யு­மெ­னவும் என்றும் அவர் குறிப்­பிட்டார்.

நேற்று கொழும்பில் நடை­பெற்ற ஊட­க­வி­ய­லாளர் சந்­திப்­பி­லேயே சுமந்­திரன் மேற்­கண்­ட­வாறு தெரி­வித்தார். அவர் அங்கு மேலும் கருத்துத் தெரி­விக்­கையில்,

மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உள்­ளக விசா­ரணை நடத்­தப்­ப­டாமல் சர்­வ­தேச விசா­ரணை மட்டும் நடத்­தினால் அந்த அறிக்கை வெறும் அறிக்­கை­யாக மட்­டுமே இருக்கும். உள்­ளக விசா­ரணை நடத்­தப்­பட்டால் இரண்­டையும் ஒப்­பிட்டு நாம் ஒரு முடி­வுக்கு வர­மு­டியும். அதே­நேரம் உள்­ளக விசா­ர­ணையின் மூலம்தான் போர்­குற்ற விசா­ர­ணையை முன்­னெ­டுத்து தக்க நட­வ­டிக்கை எடுக்க முடியும். சர்­வ­தேச விசா­ர­ணையை மட்டும் நடத்தி எந்­த­வித பயனும் ஏற்­பட்­டு­வி­டப்­போ­வ­தில்லை.

அது வெறும் ஒரு அறிக்கை அள­வி­லேயே வெளி­யி­டப்­பட்டு எங்கோ ஒரு மூலையில் முடங்கி கிடக்கும். மேலும் குற்றம் இளைத்­த­வர்­களே விசா­ரணை நடத்­து­வதில் எமக்கு உடன்­பாடு இல்லை. ஆனால் இப்­போது அப்­ப­டி­யல்ல, உள்­ளக விசா­ர­ணையை நடத்­து­வது இந்­நாட்டு அதி­கா­ரிகள் என்­றாலும், அது சர்­வ­தேச விசா­ர­ணை­களை நடத்­தி­ய­வரின் மேற்­பார்­வையின் கீழ்தான் செயற்­படும்.

இந்த விதி­முறை ஐ.நா. பிரே­ர­ணை­யி­லேயே சொல்­லப்­பட்­டி­ருக்­கின்­றது. சர்­வ­தேச விசா­ர­ணையை நடத்­தி­ய­வர்­களின் மேற்­பார்­வை­யின்­கீழ்தான் உள்ள விசா­ரணை நடத்­தப்­ப­ட­வேண்டும் என்று குறித்த பிரே­ர­ணையில் குறிப்­பி­டப்­பட்­டுள்­ளது.

கடந்த மஹிந்த ராஜ­பக்ஷ அரசு உள்­ளக விசா­ரணை நடத்­து­வதில் ஆர்வம் காட்­ட­வில்லை. அவர்கள் அதைக் கண்­டு­கொள்­ளவே இல்லை. ஆனால் இப்­போ­தைய அர­சாங்கம் உள்­ளக விசா­ரணை நடத்த முன்­வந்­தி­ருக்­கி­றது. இதை நாம் வர­வேற்­கிறோம்.

அப்­படி நடக்கும் பட்­சத்தில் சர்­வ­தேச விசா­ர­ணையின் அறிக்­கையும், உள்­ளக விசா­ர­ணையின் அறிக்­கையும் ஒன்­றா­கத்தான் இருக்க வேண்டும். ஒன்­றுக்கு ஒன்று முர­ணாக இருக்க முடி­யாது. அதனால் உள்­ளக விசா­ரணை எமக்கு சாத­க­மா­கத்தான் அமையும்.”  என்று சுமந்திரன் மேலும் கூறினார்.