செய்திகள்

போர்க் குற்ற விசாரணை விவகாரம்: மனித உரிமை ஆணையாளருடன் மங்கள பேச்சு

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் ஆணையாளர் இளவரசர் ஷெயிட் அல் ஹூசைனை, வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர சந்தித்து பேச்சுவாரத்தை நடத்தியுள்ளார்.

இந்த சந்திப்பின் போது இலங்கை விவகாரம் தொடர்பிலான ஐ.நாவின் நிபுணர்குழு அறிக்கை மற்றும் இலங்கையில் மனித உரிமைகள் நிலவரம் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளது. இதனைவிட, போர்க் குற்ற விசாரணைகளுக்காக உள்நாட்டுப் பொறிமுறை ஒன்றை அமைத்துக்கொள்வது தொடர்பிலும் ஆராயப்பட்டது.