செய்திகள்

போர்ட் சிட்டி திட்டத்தை நிறுத்துவதற்கு இந்தியாவும், அமெரிக்காவும் முயற்சி என்கிறார் விமல்

சீனாவினால் முன்னnடுக்கப்படும் கொழும்பு போட்சிட்டி திட்;டத்தை அமெரிக்காவும், இந்தியாவும் தடுத்து நிறுத்த விரும்புகின்றன,தற்போதைய அரசாங்கமும் அதனை நிறைவேற்ற முயல்கிறது என முன்னாள் அமைச்சர் விமல்வீரசன்ச குற்றம்சாட்டியுள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பிரதமர் வேட்பாளராக அறிவிக்க கோரி கண்டியில் இடம்பெற்ற பேரணியில் உரையாற்றுகையிலேயே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
பிரதமர் ரணில்விக்கிரசிங்கவினால் குறிப்பிட்ட திட்டத்தை நிறுத்த முடியுமா எனவும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
கண்டியில் தான் உரையாற்றிகொண்டிருக்கும் அந்த கூட்டத்தில் கலந்து கொணட்வர்களின் எண்ணிக்கையை பகிரங்கப்படுத்துமாறும் அவர் குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு சவால் விடுத்துள்ளார்.
நாங்கள் இழந்துகொண்டிருக்கின்ற சுதந்திரத்தை பாதுகாப்பதற்காக மகிந்த ராஜபக்சவை மீண்டும் கொண்டுவருவதற்கான போராட்டமிது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.நாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பிளவு படுத்த முயலவில்லை. அதனை வேறு யாரோ செய்துவிட்டனர்.
நாடாளுமன்றத்தில் பெரும்பான்மையை கொண்டுள்ள கட்சியின் உறுப்பினர்கள் ரணில்விக்கிரமசிங்கவின் காலின் கீழ் விழுந்து கிடக்கின்றனர்,எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்