செய்திகள்

‘போர்ட் சிட்டி’ திட்டம் இலங்கைக்கு முக்கியமானது: இலங்கைக்கான சீன தூதுவர்

சீன நிறுவனம் முன்னெடுத்து வரும் சர்ச்சைக்குரிய ‘போர்ட் சிட்டி’ செயற்திட்டமானது சீன நிறுவனத்துக்கு மட்டுமன்றி இலங்கைக்கும் முக்கியமானது என்று இலங்கைக்கான புதிய சீன தூதுவர் கியாங்லியாங் தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் செய்தியாளர்களை சந்தித்தபோதே இதனை தெரிவித்த அவர், சீனா தனது பட்டுப் பாதை திட்டத்தை முன்னெடுத்து வருவதாகவும் , இதில் இலங்கை உட்பட சம்பந்தப்பட்ட சகல நாடுகளுக்கும் நன்மை இருக்கிறது என்றும் கூறினார்.