செய்திகள்

‘போர்ட் சிட்டி’ திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கை சென்னவுக்கு உறுதியளிப்பு

சர்ச்சைக்குரிய போர்ட் சிட்டி செயற்திட்டம் விரைவில் ஆரம்பிக்கப்படும் என்று இலங்கை உறுதி அளித்துள்ளதாக சீனா தெரிவித்திருக்கிறது.

1.4 பில்லியன் செலவில் அமைக்கப்படும் இந்த திட்டம் மைத்திரி அரசாங்கத்தினால் இடைநிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில் இது தொடர்பிலான சிக்கல்கள் தீர்க்கப்பட்டு மீண்டும் திட்டம் தொடர அனுமதிக்கப்படும் என்று தனது சீன விஜயத்தில் மைத்திரிபால சிறிசேன சீன ஜனாதிபதிக்கு உறுதியளித்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.