செய்திகள்

போர்ட் சிட்டி நாட்டின் சுயநிர்ணயத்துக்கு ஆபத்து

கொழும்பில் அமைக்கப்படவுள்ள போர்ட் சிட்டி (துறைமுக நகரம் ) நாட்டின்  சுயநிர்ணயத்துக்கு ஆபத்தை ஏற்படுத்தும் என நாகவிகாரையின் விகாராதிபதி மாதுலுவாவே சோபித தேரர் தெரிவித்தார்.

குறித்த துறைமுக நகரம் அமைக்க எவ்வளவு கடற்பரப்பு சீனாவுக்கு வழங்கப்பட்டுள்ளது? இலங்கையர்கள் அந்த நகரத்துக்கு செல்ல வேண்டுமாயின் கடவுச்சீட்டுடன் செல்ல வேண்டுமா?

இந்நிலையானது வடக்கிலிருந்த நிலையையே உருவாக்கும். இந்நகர உருவாக்கமானது இலங்கையின் சுயநிர்ணயத்துக்கு ஆபத்தாகவே அமையும் என அவர் மேலும் தெரிவித்தார்.