செய்திகள்

போலி இந்திய நாணயத்தாள் வைத்திருந்த இருவர் கைது!

போலி இந்திய நாணயத்தாள் பாவனையில் ஈடுபட்ட சந்தேகநபர்கள் இருவர் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

ஜா-எல ரயில் ஒழுங்கையில் வைத்து சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

வத்தளை – எதெரமுல்ல பகுதியைச் சேர்ந்த 28 வயதான சந்தேகநபரிடம் இருந்து போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள்கள் 25 மீட்கப்பட்டுள்ளது.

மற்றைய சந்தேகநபர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் போலி ஆயிரம் ரூபா நாணயத்தாள் 156ää போலி இந்திய ஐநூறு ரூபா நாணயத்தாள் 66 அவரிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.

சந்தேகநபர்கள் குறித்து குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.