செய்திகள்

போலி கடவுச்சீட்டில் கனடா செல்ல முயன்றவர கைது

போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி ஜப்பானுக்குச் சென்று அங்கிருந்து கனடா செல்லவிருந்த இளைஞர் ஒருவரை குடிவரவு  குடியகல்வு திணைக்கள அதிகாரிகளின் விசாரணைக்கு அமைய குற்றப்புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த 27 வயதான  இளைஞர் ஒருவரே போலி கடவுச்சீட்டைப் பயன்படுத்தி கனடாவுக்குச் செல்ல முற்பட்ட நிலையில் நேற்று சனிக்கிழமை நண்பகல்  குற்றப் புலனாய்வு அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளார்.