செய்திகள்

போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி பிரான்ஸ்க்கு செல்ல முயன்ற இலங்கையர் கைது

சிங்கபூரிலிருந்து போலியான ஜேர்மன் கடவுச்சீட்டை பயன்படுத்தி பிரான்ஸ்க்கு செல்வதற்கு முயற்சித்த இலங்கையர் ஒருவர் நாடுகடத்தப்பட்ட நிலையில் அவரை கைது செய்துள்ளதாக பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலைய குற்றப்புலனாய்வு விசாரணை பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.

சந்தேகநபர் வவுனியாவைச் சேர்ந்தவர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். அவர், இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யு.எல்.308 என்ற விமானத்தின் ஊடாக கடந்த 8 ஆம் திகதி, சிங்கபூருக்கு சென்றுள்ளார். அதற்காக செல்லுபடியான கடவுச்சீட்டை பயன்படுத்தியுள்ளார் என்று விசாரணைகளிலிருந்து தெரியவந்துள்ளது.

சிங்பூரில் வைத்து முகவரிடமிருந்து போலியான கடவுச்சீட்டை பெற்று. அங்கிருந்து பிரான்ஸ்க்கு செல்வதற்காக முகவருக்கு 10 இலட்சம் ரூபாய் கொடுத்து போலியான ஆவணங்களை பெற்றுகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.