செய்திகள்

போலி விசாவை பயன்படுத்தி இத்தாலி செல்ல முயன்ற யாழ்.இளைஞன் கைது

போலி விசாவை பயன்படுத்தி துருகியிலிருந்து தரைவழி யூடாக இத்தாலிக்கு செல்வதற்கு முயன்ற யாழ்ப்பாணத்தை சேர்ந்த 28 வயதான இளைஞன், நாடு கடத்தப்பட்டுள்ளார்.

துருக்கியிலிருந்து நாடு கடத்தப்பட்ட அந்த இளைஞனை, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் அதிகாரிகள் நேற்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளனர்.

அவர், தனது செல்லுப்படியான கடவுச்சீட்டை பயன்படுத்தி தமிழ்-சிங்கள புத்தாண்டு தினமான கடந்த 14ஆம் திகதி, துருக்கிக்கு சென்றுள்ளார்.

துருக்கி விமான நிலையத்தில் வைத்து அந்நாட்டு அதிகாரிகள் அவருடைய விசாவை சோதனைக்கு உட்படுத்திய போது அது போலியானது என்பதை கண்டறிந்துள்ளனர். அதனையடுத்தே அவ்விளைஞனை திருப்பியனுப்பியுள்ளனர்.

சந்தேகநபர், இந்நாட்டில் இருக்கின்ற இலங்கை பிரஜை ஒருவருக்கு மூன்று இலட்சம் ரூபாவை கொடுத்து இத்தாலிக்கு செல்வதற்கான போலியான ஆவணங்களை தயாரித்து கொண்டுள்ளதாக ஆரம்பக்கட்ட விசாரணைகளிலிருந்து தெரியவருகின்றது என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.