மகத்தான பணியாற்றும் பிரித்தானிய சுகாதார பணியாளர்களுக்கு இனிப்பு பொதிகள் வழங்கி பாராட்டு
கொரோனா வைரஸ் தொற்றுக்கு எதிராக அல்லும் பகலும் மகத்தான பணியாற்றிவரும் பிரித்தானிய NHS சுகாதார துறையினை பாராட்டி ஆதரவு தெரிவிக்கும் வகையில் Bright Future International தொண்டு நிறுவனம் ஒரு தொகுதி இனிப்பு பொதிகளை வழங்கியுள்ளது.
பிரித்தானியாவில் வடமேற்கு லண்டனில் அமைத்துள்ள Northwick Park வைத்தியசாலையில் பணியாற்றும் மருத்துவர்கள், தாதியர்கள் மற்றும் சுகாதார ஊழியர்களுக்கே இவ்வாறு இனிப்பு பொதிகள் வழங்கப்பட்டுள்ளன. இதற்கான அனுசரணையை இனிப்பு தின்பண்ட உணவுகளை தயாரிக்கும் AMBALA FOOD LTD வழங்கியுள்ளது.
பிரித்தானியாவில் கோரோனோ வைரஸின் தாக்கம் தீவிரம் அடைந்துள்ள நிலையில் அரசாங்கம் மற்றும் மருத்துவர்களின் அறிவுரைகளை பின்பற்றுமாறும் முடிந்தளவு வெளிப்பயணகளை தவிர்த்து வீடுகளுக்குள் இருந்து ஒத்தாசை வழங்குமாறும் Bright Future International வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையில் யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பல்வேறுபட்ட உதவிகளையும் வழங்கிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.