செய்திகள்

மகனை அரசியலில் களமிறக்க போவதில்லை என சந்திரிகா அறிவிப்பு

தனது மகன் விமுக்தியை அரசியலில் களமிறக்க போவதில்லை என முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சிலர் சந்திரிகாவின் மகன் விமுக்தியை எதிர்வரும் பொது தேர்தலில் களமிறக்குமாறு தொடர்ச்சியாக கேட்டுவருகின்றனர். இதற்கு சந்திரிகா அமைதி காத்து வந்த நிலையில் நேற்று இவ்வாறு பதிலளித்துள்ளார். அதேநேரம் தமது குடும்பத்தினர் அரசியலில் களமிறங்குவது குறித்து சிந்திக்க ஒன்றும் இல்லை எனவும் தெரிவித்துள்ளார்.