செய்திகள்

மகிந்தவின் அழைப்பை ஏற்று சுப்ரமணியன் சுவாமி இலங்கை வந்தார்

இந்திய பா.ஜ.க கட்சியின் மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

இன்று பிற்பகல் அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.

இராஜாங்க அமைச்சர் டி.வி. சானக மற்றும் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பிரதித் தலைவர் செந்தில் தொண்டமான் ஆகியோர் வரவேற்றுள்ளனர்.

பிரதமர் மகிந்த ராஜபக்‌ஷவின் அழைப்பின் பேரில் அவர் இலங்கைக்கு வந்தடைந்துள்ளார்.
-(3)