செய்திகள்

மகிந்தவின் இல்ல புத்தாண்டு நிகழ்வு: கோத்தபாய, வீரவன்ச பங்கேற்பு (படங்கள்)

தமிழ் -சிங்கள புத்தாண்டுக் கொண்டாட்டங்கள் தங்காலையிலுள்ள முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் இல்லத்தில் சிறப்பான முறையில் அனுஷ்டிக்கப்பட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன.

மகிந்த ராஜபக்‌ஷ குடும்பத்தினருடன், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதாபாய ராஜபக்‌ஷ குடும்பத்தினர், முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச குடும்பத்தினர் உட்பட அவரது நெருங்கிய ஆதரவாளர்கள் பலரும் இதில் பங்குகொண்டிருந்தார்கள். பௌத்த பிக்குகள் பலரும் இதில் கலந்துகொண்டு பூஜை வழிபாடுகளை நடத்தினார்கள்.

பங்குகொண்டவர்கள் அனைவரும் இவ்வருட புதுவருட அதிஷ்ட நிறமான சிவப்பு நிற ஆடைகளுடன் காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.  பாரம்பரிய விளையாட்டுக்களும் இங்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.

000-1

000b

01

1

02

05

06

07

08