செய்திகள்

மகிந்தவின் பாதுகாப்புப் பிரிவில் இணைய விரும்பிய யோஷித்த ராஜபக்‌ஷ

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவின் மகனான கடற்படையில் பணிபுரியும் யோஷித்த ராஜபக்‌ஷ தன்னுடைய தந்தையின் பாதுகாப்புப் பிரிவில் இணைந்து பணிபுரிவதற்கு விருப்பம் தெரிவித்திருப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவான் விஜயவர்த்தன தெரிவித்திருக்கின்றார்.

இது தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கோரிக்கை முன்வைக்கப்பட்டிருப்பதாக பி.பி.சி.யின் சிங்கள சேரவக்கு பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்திருக்கின்றார்.  இருந்தபோதிலும் இதுதொடர்பில் எந்த ந;வடிக்கையும் இதுவரையில் எடுக்கப்படவில்லை.

அதேவேளையில் யோஷித்த ராஜபக்‌ஷ எவ்வாறு கடற்படையில் இணைந்துகொண்டார் என்பது தொடர்பில் விசாரணைகள் ஏற்கனவே ஆரம்பமாகியிருப்பதாகவும் அவர் தெரிவித்தார். யோஷித்த நாட்டைவிட்டு வெளியே சென்றிருப்பதும் சர்ச்சைகளை உருவாக்கியிருக்கின்றது.