செய்திகள்

மகிந்தவின் பொருட்களை வேறு வீடுகளில் தேடும் சீ.ஐ.டியினர்

தனது பொருட்களை தேடி தன்னுடைய வீட்டுக்கு வராது வேறு வீடுகளுக்கு சென்று இரகசிய பொலிஸார் தேடுதல்களை மேற்கொள்வதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கொரதொட்ட பகுதியில் அமைந்துள்ள தேவாலயமென்றில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த அவர் தாமதமாக அங்கு சென்றிருந்த நிலையில் தாமதத்திற்கான காரணத்தை அங்கிருந்த மக்களுக்கு தெளிவு படுத்தும் போதே இதனை தெரிவித்துள்ளார்.

“எனது பொருட்களை தேடி சீ.ஐ.டியினர் வேறு வீட்டுக்கு சென்றதாக அறிந்தேன் அது தொடர்பாக தேடி பார்த்துவிட்டு வந்ததாலே தாமதம் ஏற்பட்;டது. எனது பொருட்கள் எனது வீட்டில்தான் இருக்கின்றது இங்கு தேடாது வேறு வீட்டில் தேடிக்கொண்டிருக்கின்றனர்.” என தெரிவித்துள்ளார்.