செய்திகள்

மகிந்தவின் யாழ். கூட்டத்துக்கு வருவோருக்கு 3,000 ரூபா!

யாழ்ப்பாணத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவின் தேர்தல் பிரச்சாரக் கூட்டம் நடைபெறும் துரையப்பா விளையாட்டரங்கில் குவிக்கப்பட்டுள்ள பொதுமக்களுக்கு ஒருவருக்கு 3,000 ரூபா படி வழங்கப்படும் என உறுதியளிக்கப்பட்டிருப்பதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

1கூட்டத்தில் கலந்துகொள்பவர்கள் அனைருடைய பெயர்களும் பதியப்பட்டுள்ளதாகவும், ஈ.பி.டி.பி.யினரும் சுதந்திரக் கட்சியின் அமைப்பாள் இராமநாதன் அங்கஜனுமே பொதுமக்களை கூட்டத்துக்குக் கொண்டுவரும் பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இதேவேளையில், கூட்ட ஏற்பாடுகள் தொடர்பில் ஈ.பி.டி.பி.யினருக்கும் அங்கஜன் தரப்பினருக்கும் இடையில் முரண்பாடுகள் ஏற்பட்டு, வாக்குவாதங்கள் கைகலப்பாக மாறியதாகவும் உறுதிப்படுத்தப்படாத சில தகவல்கள் தெரிவிக்கின்றன.