செய்திகள்

மகிந்தவுக்கு அரச மாளிகை

பொது நிர்வாக அமைச்சுக்குச் சொந்தமாக, கொழும்பு 07 – விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள அரச மாளிகையொன்றை, முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் பயன்பாட்டுக்கு கையளிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டாரவினால், நாடாளுமன்றத்தில் நேற்று சமர்ப்பிக்கப்பட்ட ஆவணமொன்றில், இது தொடர்பாகக் கூறப்பட்டுள்ளது. மஹிந்த ராஜபக்ஷவின் பயன்பாட்டுக்காக 2015ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதியன்று, மேற்படி மாளிகை ஒதுக்கீடு செய்யப்பட்டதாக, அந்த ஆவணத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. விஜேராம மாவத்தையில் அமைந்துள்ள பீ-106ஆம் இலக்கத்தையுடைய மாளிகையே இவ்வாறு கையளிக்கப்பட்டுள்ளதாக அதில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

n10