செய்திகள்

மகிந்தவுக்கு வேட்புமனு வழங்கியதால் ஐதேகவுக்கு பாயும் ஸ்ரீ.ல.சு.க உறுப்பினர்கள்

மகிந்தவுக்கு ஐக்கியமக்கள் சுதந்திர கூட்டமைப்பில் வேட்புமனு வழங்க ஜனாதிபதி இணங்கியமைக்கு எதிர்ப்பு தெரிவித்து ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 5 உறுப்பினர்கள் ஐதேகவுடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர்.

முதற்கட்ட பேச்சுவார்த்தை வெற்றிகரமாக முடிவடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

எதிர்வரும் இரண்டு நாட்களுக்குள் பகிரங்க அறிவிப்பு விடுக்கப்படவுள்ளதாக எஸ்.பி நாவின்ன தெரிவித்துள்ளார்.