செய்திகள்

மகிந்தவுடன் பேச்சு நடத்த 6 உறுப்பினர் கொண்ட குழு: சுதந்திரக் கட்சி தீர்மானம்

ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் உருவாகக்கூடிய பிளைவைத் தடுக்கும் வகையில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு இன்று நடைபெற்ற இன்று இடம்பெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழுவின் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

மகிந்த ராஜபக்‌ஷவுடன் பேச்சுக்களை நடத்தி பொதுத் தேர்தலுக்கு முன்னர் இணக்கப்பாடு ஒன்றை ஏற்படுத்துவதற்காக ஆறு உறுப்பினர்களைக் கொண்ட உயர் மட்டக்குழு ஒன்றும் ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியால் அமைக்கப்பட்டுள்ளது.

கொழும்பில் இன்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அவசர மத்திய குழுவின் கூட்டத்திலேயே இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. குறிப்பிட்ட குழுவில் இடம்பெறுபவர்களின் பெயர் விபரங்கள் உடனடியாக அறிவிக்கப்படவல்லை.