செய்திகள்

மகிந்தவைச் சந்தித்து பசில் பேச்சு

திவிநெகும நிதி மோசடி குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்து, பிணையில் விடுவிக்கப்பட்ட நிலையில் தனியார் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டிருந்த பொருளாதார அபிவிருத்தி முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ, இன்று வியாழக்கிழமை வீடு திரும்பினார்.

வைத்தியசாலையிலிருந்து புறப்பட்டுச் சென்ற பசில் ராஜபக்ஷ,  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவை சந்தித்ததாகவும் அவர்கள் இருவருக்கும் இடையில் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் தொடர்பில் நீண்ட நேரம் பேச்சுவார்த்தை இடம்பெற்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.