செய்திகள்

மகிந்தவை ஓரங்கட்டினால் புதிய கூட்டமைப்பு உருவாகும்: வாசுதேவ எச்சரிக்கை

மகிந்த ராஜபக்‌ஷவின் ஆதரவுடன் பொதுத் தேர்தலில் களமிறங்க ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மறுக்குமாகவிருந்தால் நாங்கள் புதியதொரு கூட்டமைப்பை உருவாக்கி முன்னாள் ஜனாதிபதியை முன்னிறுத்தி பொதுத் தேர்தலில் குதிப்போம் என பாராளுமன்ற உறுப்பினர் வாசுதேவ நாயணக்கார தெரிவித்திருக்கின்றார்.

ஐக்கிய தேசியக் கட்சியைத் தோற்கடிப்பதற்கு இந்தக் கூட்டமைப்பு முன்னின்று செயற்படும். ஐ.ம.சு. கூட்டமைப்பு பொதுத் தேர்தலில் வெற்றி பெற வேண்டுமானால் நிச்சயமாக மகிந்த ராஜபக்‌ஷவின் ஆதரவு தேவை. இதனைக் கருத்திற்கொண்டு சுதந்திரக் கட்சி செயற்பட வேண்டும் எனவும் வாசுதேவ வலியுறுத்தியிருக்கின்றார்.