செய்திகள்

மகிந்தவை காப்பாற்றுகிறார் ரணில்:சந்தேகம் தெரிவிக்கிறது ஜே.வி.பி.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பாதுகாப்பதற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசியக் கட்சியினர் முயற்சிப்பதாக சந்தேகம் எழுந்துள்ளதாக ஜே.வி.பி. மாகாணசபை உறுப்பினர் லால்காந்த தெரிவித்துள்ளார்.

தனியார் தொலைக்காட்சி  ஒன்றில் நேற்று முன்தினம் சனிக்கிழமை இரவு இடம்பெற்ற அரசியல் விவாத நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டிருந்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் இந்த விவாத்தில் தெரிவித்துள்ளதாவது –

மகிந்த ராஜபக்ச ஜனாதிபதியாக இருந்த காலத்தில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பாக ஐக்கிய தேசியக் கட்சி தேடிப் பார்ப்பதாக தெரியவில்லை. அவரை மீண்டும் அரசியலுக்குள் கொண்டு வருவதற்கு அந்தக் கட்சியினர் விரும்புகின்றனரா என சந்தேகிக்க வேண்டியுள்ளது. ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் இவ்வாறாக செயற்படுகின்றனரா என எல்லோரும் சந்தேகிப்பதில் தவறில்லை என்றே கூறலாம்.

அடுத்த தேர்தலுக்கு முன்னர் கட்சியை இரண்டாக பிளவுபடுத்த முடிந்தால் நல்லது என அவர்கள் எண்ணலாம். அதன்படிதான் அவரின் காலத்தில் நடந்த ஊழல் தொடர்பாக கவனம் செலுத்தாமல் இருக்கலாம் என நினைக்கின்றோம் என லால்காந்த தெரிவித்துள்ளார்.