செய்திகள்

மகிந்தவை தனியாகச் சந்தித்துப் பேசிய மோடி

இரண்டு நாள் பயணமாக இலங்கை வந்திருந்த இந்தியப் பிரதமர் நரேந்தர மோடி முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்‌ஷவை தன்னுடைய பயணத்தின் இறுதியில் நேற்றிரவு சந்தித்துப் பேசியுள்ளார்.

இந்திய உயர் ஸ்தானிகரின் இல்லத்தில் நடைபெற்ற இராப்போசன வைபவத்திலேயே இந்தச் சந்திப்பு இடம்பெற்றது. உதவியாளர்கள் எவரும் இல்லாமல் இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். மோடியின் அழைப்பின் பேரிலேயே இந்தப் பேச்சுக்கள் இடம்பெற்றன.

சுமார் 15 நிமிடங்கள் இருவரும் தனியாகப் பேசிக்கொண்டதாக இந்தியத் தூதரக வட்டாரங்கள் தெரிவித்தன.

ஜனாதிபதித் தேர்தலில் தன்னுடைய தோல்விக்கு இந்தியாதான் காரணம் எனக் குற்றஞ்சாட்டியிருந்த மகிந்த ராஜபக்‌ஷ, இந்தியத் தலைவர்களைச் சந்திப்பதற்கும் மறுத்திருந்தார். இந்த நிலையிலேயே மகிந்த ராஜபக்‌ஷவுடனான சந்திப்பை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளை இந்தியத் தூதரகம் மேற்கொண்டிருந்தது.