செய்திகள்

மகிந்தவை பாதுகாப்பதாக உறுதியளிக்கப்படவில்லை என்கிறார் ராஜித

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பாதுகாப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உறுதியளிக்கவில்லை என அமைச்சர் ராஜிதசேனரத்தின தெரிவித்துள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமை மாற்றம் குறித்த பேச்சுவார்த்தைகளுக்காக இருவரும் சபாநாயகரின் வீட்டில் சந்தித்து பேசியவேளை மகிந்த ராஜபக்சவையும் அவரது குடும்பத்தினரையும் பாதுகாப்பதாக தற்போதைய ஜனாதிபதி உறுதியளித்ததாக பத்திரிகைகளில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையிலேயே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
எனினும் இவ்வாறான இணக்கப்பாடு எதுவும் எட்டப்படவில்லை என தெரிவித்துள்ள ராஜித குற்றம்செய்த அனைவரும் தண்டிக்கப்படுவார்கள் என குறிப்பிட்டுள்ளார்
எந்த வித இணக்கப்பாடும் எட்டப்படவில்லை, ஊழலில் ஈடுபட்டவர்கள் அல்லதுவேறு எந்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுடைய பதவிகள் எதுவாக இருந்தாலும், அவர்கள் தண்டிக்கப்படுவார்கள்,
சட்டத்தின் முன்னிலையில் அனைவரும் சமம் முன்னர் ஜனாதிபதிகளுக்கு தண்டனையின் பிடியிலிருந்து விலக்களிக்கப்பட்டிருந்தது, நாங்கள் அதனை மாற்றுவோம்,அவர்களும் சாதராண பிரஜைகள் போன்று தண்டிக்கப்படுவார்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார்.