செய்திகள்

மகிந்தவை பிரதமராக்கும் முயற்சியில் நான்கு கட்சிகள் தீவிரம்

ராஜபக்ஷ குடும்பத்தை அரசியலிலிருந்து ஓரங்கட்டும் முயற்சியில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியினர் தீவிரமாக இறங்கியுள்ளது. இதனை அறிந்துகொண்ட ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியின் மற்றைய குழு மகிந்த ராஜபக்ஷவை உள்வாங்கி அவரை எதிர்வரும் தேர்தலில் பிரதமராக்கும் முயற்சியில் ஈடுபட்டுவருகின்றனர். வாசுதேவ நாணயக்கார, தினேஷ் குணவர்த்தன, விமல் வீரவன்ச, உதயகம்மன்பில ஆகிய நான்கு பேரும் அவரது கட்சிகளும் இம் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.