செய்திகள்

மகிந்தவை பிரதமராக போட்டியிட வைப்பதே எமது நோக்கம்: தினேஷ், விமல் , வாசுதேவ

இரத்தினபுரியில் மஹிந்த ராஜபக்ஸவுக்கு ஆதரவாக நடைபெற்றுவரும் கூட்டத்தில் ஆயிரக்கணக்கான மக்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த கூட்டத்தை ஏற்பாடு செய்துள்ள முன்னாள் அமைச்சர்களான விமல் வீரவன்ச, தினேஷ் குணவர்த்தன, வாசுதேவ நாணயக்கார மற்றும் உதய கம்மன்பில ஆகியோர் தமது நோக்கம் எதிர்வரும் பொதுத் தேர்தலில் மஹிந்த ராஜபக்ஸவை பிரதமர் பதவிக்கு போட்டியிட வைப்பதே என்று கூறியுள்ளனர்.