செய்திகள்

மகிந்தவை பிரதமர் வேட்பாளராக அறிவியுங்கள்: பங்காளிக்கட்சிகள் இன்று பேரணி

பொதுத்­தேர்­தலில் பிர­தமர் வேட்­பா­ள­ராக முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக் ஷ போட்­டி­யிட வேண்­டு­மெ­னக்­கோரி ஐக்­கிய மக்கள் சுதந்­திரக் கூட்­ட­ணியின் பங்­காளிக் கட்­சிகள் இன்று மக்கள் புதன்கிழமை பேர­ணி­யொன்­றினை நடத்­து­கின்­றன. கூட்­ட­ணியில் பொது­ப­ல­சேனாவும் பங்­கா­ளி­யாக கலந்து கொள்­கின்­றது.

பிரதமர் வேட்பாளராக மகிந்த ராஜ­பக் ஷ போட்­டி­யிட வேண்டும் என சுதந்­திரக் முன்னணியின் பிர­தான பங்­காளி கட்­சி­க­ளான மக்கள் ஐக்­கிய முன்­னணி, தேசிய சுதந்­திர முன்­னணி, ஜன­நா­யக இட­து­சாரி முன்­னணி, பிவித்ரு ஜாதிக ஹெல உறு­மய ஆகிய கட்­சிகள் கூட்­டாக வலி­யு­றுத்தி வரு­கின்ற நிலையில் இன்று பிற்­பகல் 3 மணிக்கு நுகே­கொ­டையில் மக்கள் கூட்­ட­மொன்றும் இடம் பெறு­கின்­றது.

இதன்­போது மகிந்­த­வுடன் புதிய நாடு, மக்கள் தயாரா? எனும் தொனிப்­பொ­ருளில் முன்னாள் அமைச்­சர்­க­ளான விமல் வீர­வன்ச, வாசு­தேவ நாண­யக்­கார, தினேஷ் குண­வர்த்­தன மற்றும் உதய கம்மன்­பில ஆகியோர் இப்­பே­ர­ணி­யினை நடத்­து­வ­துடன் பொது­ப­ல­சேனா பௌத்த அமைப்­பி­னரும் இக்­கூட்­டத்தில் கலந்து கொள்­கின்­றனர்.

முன்னாள் ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக் ஷ மீண்டும் ஆட்சி பீடத்தில் இருக்க வேண்டும். அதேபோல் தேசிய அர­சாங்கம் என்ற கூட்­டணி அரசு தொட­ரக்­கூ­டாது என்­பதை வலி­யு­றுத்­தியே இக்­கூட்டம் இடம்­பெ­று­கின்­றது. இதில் ஐக்­கிய மக்கள் சுதந்திர முன்னணியின் அனைத்து உறுப்பினர்களுக்கும் பௌத்த அமைப்புகளுக்கும் அழைப்பு விடுக்கப் பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.