செய்திகள்

முன்னாள் முக்கிய அமைச்சர்கள், எம்.பி.க்கள் 15 பேர் மைத்திரியுடன் இணைவு: கட்சித் தலைவராகவும் தெரிவு

மகிந்த ராஜபக்‌ஷ அரசாங்கத்தின் முக்கிய அமைச்சர்கள், எம்.பி.க்கள் பலர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவை ஆதரவை தெரிவித்துள்ளார்கள். இன்று மாலை 6.30 மணியளவில் கொழும்பிலுள்ள மைத்திரிபால சிறிசேனவின் வாஸஸ்தலத்துக்கு வந்த இவர்கள் இவர்கள் மைத்திரிபாலவுடன தற்போது கொழம்பில் பேச்சுக்களை நடத்தியுள்ளனர்.

முன்னாள் அமைச்சர்களான அதாவுட செனவிரட்ண, சரத் அமுனுகம, தயாசிறி ஜயசேகர, ரெஜனினோல்ட் கூரே உட்பட முக்கியமான முன்னாள் அமைச்சர்கள் பலர் ஜனாதிபதி மைத்ரிக்கு ஆதரவை வெளிப்படுத்தியுள்ளனர்.

இதனைவிட சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய குழு உறுப்பினர்களில் 24 க்கும் அதிகமானவர்கள் மைத்திரிக்கு ஆதரவைத் தெரிவித்திருப்பதுடன் கட்சியின் தலைவராக மைத்தியை நியமித்துள்ளனர். போஷகராக சந்திரிகாவும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்தக் கூட்டத்தில் கட்சியின் புதிய பொதுச்செயலராக துமிந்த திசநாயக்கவும், பொருளாளராக ஜனக பண்டார தென்னக்கோனும் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். சந்திரிகா குமாரதுங்க மற்றும் மகிந்த ராஜபக்ஷ ஆகியோர் கட்சியின் காப்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.

000