செய்திகள்

மகிந்த ஆரம்பித்த மிஹின் லங்கா விமான நிறுவனத்துக்கு மூடுவிழா!

மகிந்த ராஜபக்‌ஷவினால் ஆரம்பிக்கப்பட்டு தொடர்ந்தும் நட்டத்தில் இயங்கிக் கொண்டிருந்த மிஹின் லங்கா விமான சேவையை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

ஸ்ரீலங்கா எயர்லைன்ஸ், மஹின் லங்கா ஆகிய நிறுவனங்கள் ஒன்றாக இணைக்கப்படும் என்று நிதி அமைச்சர் ரவி கருணநாயக்க இன்று தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.

ஸ்ரீலங்கா எயர்லைன்ஸ் கடந்த 5 வருடங்களில் 100 பில்லியன் நட்டத்தையும் மஹின் லங்கா 5 வருடங்களில் 15 பில்லியன் நட்டத்தையும் எதிர்கொண்டுள்ளதால் இவற்றை எதிர்காலத்தில் தவிர்க்கும் வகையில் இந்த இரு நிறுவனங்களும் ஒன்றாக இணைக்கப்படும் என்று தெரிவித்தார்.