செய்திகள்

மகிந்த குடும்பம் அனைத்தையும் அழித்துவிட்டது! விரும்பியவருக்கு வாக்களியுங்கள்: மேர்வின்

ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி  மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவான பரப்புரையில் இருந்து ஒதுங்கியுள்ள, அமைச்சர் மேர்வின் சில்வா, விரும்பிய யாருக்காவது வாக்களிக்கும்படி பொதுமக்களைக் கேட்டுக் கொண்டுள்ளார். மகிந்த ராஜபக்‌ஷ குடும்பத்தினர் அனைத்தையும் அழித்துவிட்டனர் எனவும் அவர் அதிரடியாக அறிவித்துள்ளார்.

கிரிபத்கொடவில் உள்ள சிறிலங்கா சுதந்திரக் கட்சி செயலகத்தில் உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் தனது உரையில் மேலும் தெரிவித்ததாவது:

“மகிந்த ராஜபக்ஷ ஒரு உயர்வான மனிதர். அவரது குடும்பத்தினர் எல்லாவற்றையும் அழித்து விட்டனர். வாக்களிப்பு நிலையத்துக்குச் சென்று விரும்பிய யாருக்கேனும் வாக்களியுங்கள்.  எதிர்வரும் 8 ஆம் திகதிக்கு பின்னர், எதிரணியில் நான் அமர்ந்திருப்பேன்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.