செய்திகள்

மகிந்த கோத்தாவிற்கு எதிராக குற்றப்புலனாய்வு பிரிவினரிடம் முறைப்பாடு

ஜனாதிபதி தேர்தல் தினத்தன்று இடம்பெற்ற சதிப்புரட்சி முயற்சி தொடர்பாக வெளிவிவகார அமைச்சர் மங்களசமவீர குற்றபுலனாய்வு திணைக்களத்திடம் முறைப்பாடொன்றை பதிவுசெய்துள்ளார்.
இந்த முறைப்பாட்டை பதிவுசெய்வதற்காக அமைச்சர் மங்களசமரவீர குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு சென்றதாக பொலிஸ்பேச்சாளர் அஜித்ரோகன தெரிவித்துள்ளார்.
இதேவேளை முன்னாள் ஜனாதிபதி மற்றும்,பாதுகாப்பு செயலாளர் மற்றும் பிரதமநீதீயரசர் ஆகியோரிற்கு எதிராக அவர்கள் மைத்திரிபால சிறிசேன பதவியேற்பதை தடுக்க முயன்றதாக தான் முறைப்பாடு செய்துள்ளதாக மங்கள சமரவீர  தெரிவித்துள்ளார். முன்னாள் ஜனாதிபதி இந்த குற்றச்சாட்டை நிராகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.